Women Adventure Network of India(WANI) என்ற மகளிர் அமைப்பை சேர்ந்த 15 இளம்பெண்கள், கடந்த 2011ஆம் ஆண்டு கொல்கத்தாவில் இருந்து கன்னியாகுமரி வரையிலான சுமார் 3000 கி.மீ தூரத்தை சைக்கிளில் பயணம் செய்து சாதனை படைத்தனர். தற்போது அடுத்த சாதனையாக குஜராத்தின் கட்ச் வளைகுடாவில் இருந்து கேரளா வரை 2500 கி.மீ தூரம் சைக்கிள் பயணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இந்த பயணம் வரும் ஜனவரி 14ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 14ஆம் தேதி முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘Go Green Girls’ என்ற தலைப்பில் சைக்கிள் பயணம் மேற்கொள்ள 15 இளம்பெண்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு தயார் நிலையில் உள்ளனர். இவர்கள் நாள் ஒன்றுக்கு 120 கி.மீ தூரம் வரை பயணம் செய்து வழியில் உள்ள பொதுமக்களை சந்தித்து பசுமையான இந்தியாவை மாற்ற செய்யக்கூடிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். வழியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று இந்த பெண்கள் ஆரோக்கியமான இந்தியா என்ற தலைப்பில் உரையாட உள்ளனர்.
15 பெண்களின் இந்த வித்தியாசமான முயற்சிக்கு நாடு முழுவதும் உள்ள பெண்கள் அமைப்பு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன. இந்த சாகச பயணம் வெற்றியுடன் அமைய நாமும் வாழ்த்துவோம்.
Leave a Reply
You must be logged in to post a comment.