shadow

கிரீஸ் எல்லையில் 41 ஆயிரம் அகதிகள். சிக்கலில் ஐரோப்பிய யூனியன்

refugeeசிரியா மற்றும் ஈராக் நாடுகளில் இருந்து வரும் அகதிகளை ஐரோப்பிய யூனியனுக்குள் சேர்ப்பது குறித்து ஏற்கனவே பல்வேறு சிக்கல்கள் நிலவி வரும் நிலையில் தற்போது மேலும் சுமார் 40 ஆயிரம் பேர் ஐரோப்பிய யூனியனில் செல்ல கிரீஸ் எல்லையில் காத்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. பெண்கள், குழந்திகள் இதில் அதிகம் இருப்பதால் கிரீஸ் நாடு கருணை காட்ட வேண்டும் என்று அகதிகள் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மட்டும் சுமார் 54 ஆயிரம் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் கிரீஸ் எல்லையில் காத்திருப்பதாக ஐ.நா சேவை மையங்கள் எடுத்த கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ள நிலையில் அவர்களில் சுமார் 41 ஆயிரம் பேர் தஞ்சம் அடைய விரும்புவாக கோரிக்கை விடுத்துள்ளதாகவும், சுமார் 2 ஆயிரம் பேர் மீண்டும் தாயகம் திரும்புவதாக கூறியுள்ளதாகவும் கிரீஸ் நாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஈராக், சிரியாவின் உள்நாட்டு போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தினமும் நூற்றுக்கணக்கானோர் அகதிகளாக படகில் கிரீஸ் எல்லைக்கு செல்கின்றனர். இவர்களில் பலர் படகு கவிழ்ந்து மரணம் அடைந்து விடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply