சென்னை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் உள்பட 50 பேருக்கு கொரோனா

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் உள்பட 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

கொரோனா மூன்றாவது அலை பரவத் தொடங்கியதை அடுத்து தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் உள்ளிட்ட 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

சென்னையில் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் இறுதியாண்டு எம்.பி.பி.எஸ் மாணவர்கள் 30 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

மேலும், சுகாதாரப் பணியாளர்கள் 7, ஸ்டாஃப் நர்ஸ் 4 பேர் , முதுகலை பட்டதாரி மாணவர்கள் 2 பேர் உள்ளிட்டோர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.