shadow

ngoவெளிநாட்டு நிதியுதவி பெற்று கடந்த மூன்று ஆண்டுகளாக முறையான கணக்குகளை சமர்ப்பிக்க தவறிய 1,142 தொண்டு நிறுவனங்களின் உரிமைகளை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் 1,142 தொண்டு நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கபட்டதாகவும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பதிலளிக்குமாறு கடிதங்கள் அனுப்பப்பட்டதாகவும், ஆனால் அந்த கடிதங்களில் பாதிக்கு மேல் திரும்ப வந்துவிட்டதாகவும் மத்திய அரசின் உள்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

மத்திய அரசு அனுப்பிய கடிதங்களை பெற்றுக்கொண்ட தொண்டு நிறுவனங்களும் பதில் அனுப்பவில்லை என்பதால் சம்பந்தப்பட்ட 1,142 தொண்டு நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதாக உள்துறை இணைச்செயலாளர் ஜி.கே.விவேதி ரத்து செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

Leave a Reply