shadow

குறைந்தபட்ச இருப்பு: எஸ்பிஐ-க்கு மத்திய அரசு கோரிக்கை

தனியார் வங்கிகள் போலவே அரசு வங்கியான பாரத ஸ்டேட் வங்கியும் வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கில் குறைந்த பட்சம் ரூ.5,000 வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஒருசில நிபந்தனைகளை விதித்து அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்நிலையில் ஸ்டேட் வங்கி தனது முடிவை கைவிட வேண்டும் என்று வங்கி நிர்வாகத்திடம் மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி பெரு நகர வாழ் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் குறைந்த பட்சம் ரூ.5,000 வைத்திருக்க வேண்டும் என்றும், நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் ரூ.3, 000, புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள் ரூ.2,000 ஆயிரம், கிராமங்களில் வசிப்பவர்கள் ரூ.1000 கட்டாயம் கணக்கில் வைத்திருக்க வேண்டும் என்றும் புதிய நிபந்தனை விதித்துள்ள்து. அவ்வாறு கணக்கில் குறிப்பிட்ட பணம் இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையால் பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் கோடிக்கணக்கான சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதை அடுத்து இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கிக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இதேபோன்று எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. ஆக்சிஸ் உள்பட சில தனியார் வங்கிகள் பணம் டெபாசிட் செய்வதற்கும், பணம் எடுப்பதற்கும் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளன. ஒரு மாதத்துக்கு 4 தடவைக்கு மேல் பணம் எடுக்கப்பட்டாலும், போடப் ட்டாலும் ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படும் என்று வங்கிகள் அறிவித்துள்ளன. இந்த முடிவும் வாடிக்கையாளர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply