shadow

bank

ஜெர்மனி நாட்டு வங்கியில் கருப்புப்பணத்தை முதலீடு செய்த இந்தியர்களின் 26 பேர் கொண்ட பட்டியல் இன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

ஜெர்மனியில் உள்ள லெடன்ஸ்டெயின் வங்கியில் இந்தியர்கள் பெருமளவில் கறுப்புப்பணத்தை டெபாசிட் செய்து வைத்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, அதில் முதலீடு செய்தவர்களில் பட்டியலை வழங்குமாறு 2011ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் மத்திய அரசு இதுகுறித்து முறையான நடவடிக்கை எடுக்காததால் கடந்த வாரம் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது.

இதையடுத்து மத்திய அரசு வழக்கறிஞர் இன்று சுப்ரீம் கோர்ட்டில் சீல் வைக்கப்பட்ட கவர் ஒன்றை தாக்கல் செய்தார். அதில் ஜெர்மனி வங்கியில் முதலீடு செய்தவர்களின் 18 பேர் அடங்கிய பட்டியல் உள்ளதாகவும், மீதி பெயர்களை அனுப்புமாறு சம்மந்தப்பட்ட வங்கிக்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுள்ளது.

இந்த பட்டியலில் பங்கு மார்க்கெட் மோசடி மன்னன் ஹர்சத் மேத்தா பெயர் உள்ளதாகவும், மற்ற நபர்களின் பெயர்கள் குறித்து நாளை தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply