shadow

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர்,தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.