அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து! 35 பயணிகள் படுகாயம்!

கன்னியாகுமரி தாழாகுடியிலிருந்து இன்று காலை அரசு பேருந்து நாகர்கோவில் நோக்கி செல்ல பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

இந்நிலையில் புத்தேரி மேம்பாலம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது ஸ்டியரிங் வேலை செய்யாததால் திடீரென 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 20 பெண்கள் 5 குழந்தைகள் 10 ஆண்கள் என 35 பேர் படுகாயம் அடைந்தனர்.