சட்டீஸ்கரின் தலைநகர் ராய்பூரில் இருந்து சுமார் 200 கி.மீ. தூரமுள்ள கோர்பா தொகுதியில் பா.ஜ.க. தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதலமைச்சருமான நரேந்திரமோடி பேசியதாவது:-

‘காங்கிரஸ் கட்சினர் அவர்கள் வென்ற தொகுதிக்கு சென்றால் அவர்கள் மீது மக்கள் கல் எறிவார்களோ என்ற பயத்தில் உள்ளனர் அதையும் மீறி அவர்கள் மக்களை சந்திக்க சென்றால் மக்கள் அவர்களிடம் காலணிகளை காட்டி அனுப்பிவைக்கின்றனர்.

ஏழ்மை என்றால் என்னவென்றே தெரியாத காங்கிரஸ் கட்சியினர் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நூறே நாட்களில் விலைவாசியை குறைத்து விடுவோம் என்று சவால் விட்டனர்.

அவர்கள் ஆட்சிக்கு வந்து 4 1/2 ஆண்டுகள் ஆகியும் தலைவிரித்தாடும் விலைவாசியை கட்டுப்படுத்த முடியவில்லை.

காங்கிரஸ் கட்சியினர் தேர்தலில் மக்கள் பா.ஜ.க கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்கும்போது அவர்களுக்கு மின்சார தாக்குதல் ஏற்படுமென ஒரு பய உணர்வை ஏற்படுத்துகிறார்கள். இதை எதிர்த்து தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று பேசியுள்ளார்

Leave a Reply