shadow

துணை குடியரசு தலைவர் தேர்தலில் காந்தியின் பேரன்? வெற்றி பெறுவாரா?

இந்திய குடியரசு தலைவர் தேர்தல் வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆளும் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த் அவர்களும் எதிர்க்கட்சிகள் சார்பில் மீராகுமாரும் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்வதில் காங்கிரஸ் கட்சி கடந்த சில நாட்களாக பிசியாக இருந்தது. இந்த நிலையில் மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி, எதிர்கட்சியினர் சார்பில் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

துணை குடிரசுத் தலைவராக உள்ள ஹமீத் அன்சாரியின் பதவிகாலம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி முடிவடைகின்றது. இதற்கான மனுதாக்கல் கடந்த 4ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை நடைப்பெறுகின்றது.

இந்நிலையில் இன்று நாடாளுமன்ற நூலகத்தில் எதிர்கட்சிகளின் கூட்டம் நடைப்பெற்றது. இதில் பாஜக கூட்டணியில் இல்லாத 17 கட்சிகள் பங்கேற்றன. இதில் எதிர்கட்சிகளின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply