மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக ஐதராபாத் நகரை சேர்ந்த சத்யா நாதெள்ளா தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு போட்டியாக இன்னொரு இந்தியர் பரிசீலனையில் உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சென்னையை சேர்ந்த சுந்தர் பிச்சை என்பவர் தற்போது கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கூகுள் க்ரோம் தேடுபொறியை உலக அளவில் முதலிடத்துக்கு கொண்டு செல்ல பெரும் முயற்சி எடுத்தவர் இந்த சுந்தர் பிச்சை என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் நிறுவனத்தின் ஆப்ஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பிரிவுகளையும் தற்போது கவனித்து வரும் சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரி பதவிக்கு பரிசீலனையில் இருக்கும் இருவருமே இந்தியர் என்பதால் இருவரில் யாருக்கு அந்த பதவி கிடைத்தாலும் இந்தியர்களுக்கு பெருமைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply