கூகுள் அறிமுகம் செய்த ஆண்ட்ராய்டு 11: பயனாளிகள் மகிழ்ச்சி

கூகுள் அறிமுகம் செய்த ஆண்ட்ராய்டு 11: பயனாளிகள் மகிழ்ச்சி

கூகுள் நிறுவனம் தற்போது ஆண்ட்ராய்டு 11-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு ஆண்ட்ராய்டு அறிமுகம் செய்த நிலையில் முதல் பதிப்புக்கு ஆண்ட்ராய்டு 1.0 என்று பெயரிடப்பட்டது. அதன்பிறகு அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டுவந்த கூகுள், தற்போது ஆண்ட்ராய்டு 11 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

பிப்ரவரி 19ஆம் தேதி, பிரிவியூ வெர்ஷனை வெளியிட்ட கூகுள் வரும் ஜூன் 2 ஆம் தேதி முதல் ஆண்ட்ராய்டு 11 அனைத்து மாடல் ஸ்மார்ட்போன்களிலும் செயல்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 2,3,3A, 4 மற்றும் XL மாடல் ஸ்மார்ட்போன்களில் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 11இல் 5ஜி தொழில்நுட்ப அழைப்புகள், மேம்பட்ட பல பாதுகாப்பு அம்சங்கள், பாதுகாப்பான கைரேகை சென்சார், டார்க் மோடு உள்ளிட்ட வசதிகள் இதில் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published.