கூகுளில் தப்பு கண்டுபிடித்த இந்திய இளைஞருக்கு மிகப்பெரிய கெளரவம்!

கூகுளில் தப்பு கண்டுபிடித்த இந்திய இளைஞருக்கு விருது வழங்கி கூகுள் நிறுவனம் கவுரவித்தது

உலகின் முன்னணி தேடு தளங்களில் ஒன்றான கூகுளில் உள்ள மிகப்பெரிய குறைபாடு ஒன்றை இந்தியாவை சேர்ந்த ரித்துராஜ் சவுத்திரி என்ற 19 வயதே ஆன இளைஞர் கண்டுபிடித்தார்.

மணிப்பூரில் உள்ள ஐஐடியில் படித்து வரும் இவர் கண்டுபிடித்த குறைபாட்டை ஆய்வு செய்த கூகுள் இது முக்கிய குறைபாடு தான் என்பதை ஒப்புக் கொண்டு அவருக்கு சிறப்பு விருது வழங்கியுள்ளது.

மேலும் கூகுளின் குறைபாடுகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாளர் பட்டியலில் அவருடைய அவரையும் இணைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.