ஆல்பாபெட் நிறுவனத்திற்கும் சிஇஓ: சுந்தர் பிச்சைக்கு குவியும் வாழ்த்துக்கள்

ஆல்பாபெட் நிறுவனத்திற்கும் சிஇஓ: சுந்தர் பிச்சைக்கு குவியும் வாழ்த்துக்கள்

கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வரும் சுந்தர் பிச்சை அவர்களுக்கு தற்போது கூடுதலாக அந்நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் என்ற நிறுவனத்தின் சிஇஓ பதவியும் கிடைத்துள்ளது

இதுகுறித்து ஆல்பாபெட் நிறுவனத்தினர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூகுள் சிஇஓ பொறுப்புடன் கூடுதலாக ஆல்பாபெட் நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பையும் சுந்தர் பிச்சை அவர்களே கவனித்து கொள்வார் என்று அறிவித்துள்ளனர்

மதுரையில் பிறந்து சென்னையில் வளர்ந்த ஒரு தமிழருக்கு உலகின் நம்பர் ஒன் இண்டர்நெட் நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக மட்டுமன்றி அதன் தாய் நிறுவனத்தின் சிஇஓவாகவும் பதவியை வகிப்பது உலக தமிழர்களுக்கு கிடைத்த ஒரு பெருமையாக கருதப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published.