கூகுளின் முதல் எதிரியாக மாறிய முன்னாள் கூகுள் ஊழியர்

கூகுளின் முதல் எதிரியாக மாறிய முன்னாள் கூகுள் ஊழியர்

கூகுள் நிறுவனத்தின் தானியங்கி கார் தொழில்நுட்பத்தில் தலைமை பொறியாளராக பணிபுரிந்தவர் அந்தோனி லெவன்டோஸ்கி என்பவர். நியூயார்க் நகரைச் சேர்ந்த இவர் கூகுளின் தானியங்கி கார் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக கடந்த 2015ஆம் ஆண்டு செயல்படுத்தி காட்டினார்.

இந்நிலையில் கடந்த 2016 ஜனவரி மாதம் கூகுள் நிறுவனத்தில் இருந்து விலகிய அந்தோனி, ஓட்டோ என்ற பெயரில் தானியங்கி டிரக் தயாரிக்கும் நிறுவனத்தை சொந்தமாக தொடங்கினார். உலகின் முன்னணி கார் நிறுவனமான உபேர் நிறுவனம் ரூ.4,529 கோடிக்கு ஓட்டோ நிறுவனத்தை கையகப்படுத்தியதால் தற்போது உபேர் நிறுவன தானியங்கி கார் திட்டத்தின் மூத்த இன்ஜினீயராக அந்தோனி லெவன் டோஸ்கி பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கூகுள் நிறுவனம் ஓட்டோ மீது வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில், தங்களுடைஅ நிறுவன தானியங்கி கார் திட்ட தொழில்நுட்பம் தொடர்பான 14,000 பக்க ரகசிய ஆவணங்களை அந்தோனி லெவன்டோஸ்கி திருடியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. யிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள் ளது.

இதுகுறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: உபேர் நிறுவனத்துடன் எங்களுக்கு நெருங்கிய வர்த்தக தொடர்பு உள்ளது. எனினும் எங்களது தொழில்நுட்பம் திருடப்பட்டிருப்பதால் வேறு வழியின்றி அந்த நிறுவனம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். எங்களது தானியங்கி கார் தொழில்நுட்பத்தையே உபேர் தானியங்கி கார் திட்டத்துக்கு அந்தோனி லெவன்டோஸ்கி பயன்படுத்தி உள்ளார்’ என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.