அமெரிக்க ஹேக்கருக்கு ரூ.2 கோடி கொடுத்த கூகுள்: அதிர்ச்சி காரணம்!

அமெரிக்க ஹேக்கருக்கு ரூ.2 கோடி கொடுத்த கூகுள்: அதிர்ச்சி காரணம்!

அமெரிக்காவை சேர்ந்த ஹேக்கர் ஒருவரின் வங்கி கணக்கிற்கு கூகுள் நிறுவனம் ரூபாய் 2 கோடி ரூபாய் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

அமெரிக்காவை சேர்ந்த சாம் கர்ரி என்பவர் தொழில்நுட்ப நிறுவனங்களின் மென்பொருளில் உள்ள தவறுகளை கண்டுபிடித்து அதற்கான வெகுமதியை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் திடீரென அவரது வங்கிக் கணக்கிற்கு ரூபாய் 2 கோடியே கூகுள் நிறுவனம் அனுப்பியுள்ளது

கூகுள் நிறுவனத்திற்கு தான் எந்த உதவியும் செய்யாமல் அந்த பணம் வந்ததை அடுத்து அவர் கூகுள் நிறுவனத்திற்கு தகவல் கொடுத்தார்

இதனை அடுத்து அவரது வங்கி கணக்கிற்கு தவறுதலாக ரூபாய் 2 கோடி அனுப்பப்பட்டுள்ளது என்பதை கூகுள் நிறுவனம் கண்டுபிடித்து அவருக்கு பாராட்டுதல்களை தெரிவித்து.