shadow

எஞ்சின் இல்லாமல் ஓடிய சரக்கு ரயில்: ஒரிசாவில் பரபரப்பு

ஒரிசா மாநிலத்தில் சரக்கு ரயில் ஒன்று எஞ்சின் இல்லாமல் சுமார் 2 கிமீ ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.

ஒடிசா மாநிலம் தாமரா என்ற இடத்தில் இருந்து ஜாம்ஷெட்பூர் நோக்கி நிலக்கரி ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் ஒன்று நேற்று முன்தினம் இரவு கான்டபடா மற்றும் பகனகா ரயில் நிலையங்களுக்கு இடையே நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது அந்த ரயிலில் இருந்த 6 பெட்டிகள் மட்டும் என்ஜின் இல்லாமல் 2 கி.மீ. தூரம் திடீரென ஓடியது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரயில்வே ஊழியர்கள் உடனடியாக ரயிலை நிறுத்தினர். இந்த சம்பவத்தால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் மற்றும் பொருள் இழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

என்ஜினையும் பெட்டிகளையும் சரியாக இணைக்காததாலும், தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும் ரயில் பெட்டிகள் தனியாக ஓடியதாக அதிகாரிகள் கூறினர்.
இதன் காரணமாக 2 மணி நேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Reply