ஆந்திர மாநிலத்தில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் ஒன்று கேரள மாநிலம் திருவூருக்கு சென்றுகொண்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு 11.15 மணியளவில் ஜோலார்பேட்டை அருகே பக்கிரிதக்கா கேட் அருகே யார்டு பகுதியில் இருந்து மெயின் லைனுக்கு மாறியபோது எதிர்பாராத நிலையில் சரக்கு ரயிலின் பெட்டி ஒன்று தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது. இதுபற்றி ரயில் டிரைவர் கொடுத்த தகவலின்பேரில், ரயில்வே மீட்பு பணி குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடம் புரண்ட பெட்டியை நவீன ஜாக்கி இயந்திர உதவியுடன் 1 மணிநேரம் போராடி சரி செய்து அப்புறப்படுத்தினர்.

Leave a Reply