ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் தங்கம் விலை! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!

சென்னையில் தங்கத்தின் விலை, இன்று அதிரடியாக உயர்ந்துள்ளதால், நகைபிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 16 ரூபாய் உயர்ந்து, ரூ.4,676-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 128 ரூபாய் உயர்ந்து, ரூ.37,408-க்கு விற்பனையாகிறது.

இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 13 ரூபாய் உயர்ந்து, ரூ.3,830-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு 600 ரூபாய் உயர்ந்து, ரூ.62,300-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.62.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது