shadow

இந்தியாவின் புகழ்பெற்ற சபரிமலை கோவிலில் புதியதாக நிறுவப்பட்ட தங்கக்கொடி மரத்தில் மர்ம நபர்கள் சிலர் பாதரசத்தை ஊற்றி சேதப்படுத்தியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோயிலில் இருந்த பழமையான செப்பு கொடிமரம் சேதமடைந்ததை அடுத்து, தங்கத்தகடுகள் பதிக்கப்பட்ட புதிய கொடிமரம் நேற்று நிறுவப்பட்டது.

காலையில் பக்தர்களின் கரகோஷத்திற்கு நடுவே நிறுவப்பட்ட தங்க கொடிமரம் நிறுவப்பட்ட சிலமணி நேரங்களில்ல் தங்க தகடுகள் மீது பாதரசம் ஊற்றி ‌சேதப்பட்டது தெரிய வந்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து சபரிமலை நிர்வாகம், அளித்த புகாரின் அடிப்படையில் சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு 5 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட 5 பேர்களும் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *