shadow

gobi-paratha212

கோபி பராத்தா தேவையான பொருட்கள்

பராத்தாவிற்கு

கோதுமை மாவு   – 2 கப்

உப்பு                               – 1/2 டீஸ்பூன்
தண்ணீர்                     – 3/4 கப்

மசாலாவிற்கு

காலிஃபிளவர்                                               – 150 கிராம்

கொத்தமல்லி                                               – சிறிதளவு
இஞ்சி                                                                  – 1 இன்ச்
மாங்காய் பவுடர் (ஆம்சூர் பொடி) – 1 டீஸ்பூன்
கரம் மசாலாப்பொடி                               – 1 டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி                                        – 1 டீஸ்பூன்
உப்பு                                                             – தேவையான அளவு

கோபி பராத்தா செய்முறை

கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து ஒரு ஈரத்துணியை போட்டு மூடி அரைமணி நேரம் ஊற விடவும்.காலிஃபிளவர், கொத்தமல்லி, இஞ்சி மூன்றையும் துருவிக் கொள்ளவும். பின் காலிஃபிளவருடன் மசாலாவிற்கு சொன்ன பொருள்கள் அனைத்தையும் ஒன்றாகக் கலக்கவும். பிசைந்து வைத்துள்ள மாவில் எலுமிச்சம் பழ அளவு எடுத்து அதனை சப்பாத்திக்கல்லில் வட்டமாகத் தேய்த்து அதன் நடுவில் செய்து வைத்துள்ள மசாலாவை 1 டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து, ஒரத்தில் 1 இடைவெளி விட்டு நடுவில் வைத்து பரப்பவும். அதன் மேல் 1 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவை தூவவும். (இப்படி செய்வதால் மாவு காய்கறிகளில் உள்ள ஈரத்தன்மையை ஊறிஞ்சி பராத்தா மொறு மொறுப்பாக இருக்கும்). அதே அளவு மாவை எடுத்து முதலில் தேய்த்த அளவு வட்டமாக தேய்த்து, காலிஃபிளவர் மசாலா வைத்த சப்பாத்தி மேல் வைத்து மூடி அதன் மேல் ஒரு சிட்டிகை உப்பு, மிளகாய் பொடி தூவவும். அதனை திரும்பவும் சப்பாத்திக்கல்லில் வைத்து மெதுவாக தேய்த்து தோசைக்கல்லில் போட்டு 2 டீஸ்பூன் நெய் விட்டு திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும்.

 

Leave a Reply