shadow

விஜய் மல்லையாவின் பங்களாவை யாரும் ஏலம் கேட்க வராதது ஏன்?

goa-bungalowபிரபல தொழிலதிபர் விஜய்மல்லையா பல ஆயிரம் கோடி இந்திய வங்கிகளிடம் கடன் வாங்கி அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்ட நிலையில் அவரிடம் இருந்து பணத்தை திரும்ப பெற மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.

இதன்படி முதல்கட்டமாக விஜய் மல்லையாவுக்கு சொந்தமான கோவா சொகுசு பங்களாவை ஏலம் விட முடிவு செய்யப்பட்டது. நேற்று இந்த பங்களாவை இணையதளத்தின் மூலம் ஏலம் விட ஆரம்பித்த நிலையில் இந்த ஏலத்தில் எந்தவொரு நபரும் சொகுசு பங்களாவை ஏலம் கேட்க முன்வரவில்லை.

இந்த பங்களாவின் ஏல கேட்பு மதிப்பு ரூ.85.29 கோடியாக பாரத ஸ்டேட் வங்கி நிர்ணயித்த நிலையில் ஏலம் கேட்க யாரும் முன்வராதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏல மதிப்பு அதிகமா? அல்லது விஜய் மல்லையாவின் தலையீட்டால் ஏலம் கேட்க யாரும் வரவில்லையா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்த பங்களா யுனைடெட் பிவரேஜஸ் நிறுவனத்துக்குச் சொந்தமானதாகும். கிங்பிஷர் நிறுவன கடனுக்காக வங்கிகளிடத்தில் இந்த பங்களா அடமானம் வைக்கப்பட்டிருந்தது. இந்த பங்களாவை வாங்க விருப்பம் உள்ள ஏலதாரர்கள் பார்ப்பதற்காக செப்டம்பர் 26 மற்றும் 27 தேதிகளிலும், அக்டோபர் 5-6 தேதி களிலும் திறந்து காட்டப்பட்டது.

Leave a Reply