கோவாவில் அடுத்த மாதம் 20 ஆம் தேதி 44 வது சர்வதேச இந்திய திரைப்பட விழா தொடங்குகிறது. நவம்பர் 30 வரை நடக்கும் இந்த விழாவில் திரையிட ராமின் தங்கமீன்கள் தேர்வாகியிருக்கிறது.

மொத்தம் 10 பேர் கொண்ட குழு இந்திய மொழிகளில் தயாரான 25 படங்களை திரையிட தேர்வு செய்தனர். அதில் ஒரேயொரு தமிழ்ப் படம், தங்கமீன்கள்.

கோவா திரைப்பட விழாவில் திரையிட தங்கமீன்கள் தேர்வாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்தார் இயக்குனர் ராம்.

Leave a Reply