shadow

பொது இடத்தில் மது அருந்தினால் அபராதம்: கோவா முதல்வர் உத்தரவு

கோவாவில் நாளுக்கு நாள் பொது இடங்களில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவது மட்டுமின்றி சட்ட ஒழுங்கும் சீர்குலைவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில் கோவாவில் பொது இடங்களில் மது அருந்துவோருக்கு ஆகஸ்ட் 15 முதல் அபராதம் விதிக்க அம்மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்படி இனிமேல் பொது இடங்களில் மது அருந்துவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

அதேபோல் கோவாவில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துபவர்களுக்கும் ரூ.100ல் இருந்து ரூ.2500 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் முதல்வர் மனோகர் பாரிக்கர் உத்தரவிட்டுள்ளார். இதேபோன்ற உத்தரவை மற்ற மாநில முதல்வர்களும் பிறப்பித்தால் பொது இடங்களில் மது குடிப்போர்களின் எண்ணிக்கை குறையும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்

Leave a Reply