நிர்பயா மீதுதான் தவறு: ஆசிரியையின் சர்ச்சை பேச்சு

நிர்பயா மீதுதான் தவறு: ஆசிரியையின் சர்ச்சை பேச்சு

கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவியான நிர்பயா தனது ஆண் நண்பருடன் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது, ஆறு பேர்களால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது

இந்த நிலையில் நள்ளிரவில் ஜின்ஸ் அணிந்து லிப்ஸ்ட்க் போட்டு ஆண் நண்பருடன் வெளியே சென்றதே இந்த சம்பவத்திற்கு காரணம் என்றும், அழகில்லாத பெண்கள் மட்டுமே கவர்ச்சியான ஆடை மற்றும் லிப்ஸ்டிக் அணிந்து தங்களை அழகுள்ளவர்களாக காட்ட முயற்சிப்பதாகவும், சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்பூரில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலாயா பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவிகள் மத்தியில் பேசியுள்ளார்.

அந்த ஆசிரியை பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் இதுகுறித்து விசாரணை செய்ய பள்ளி பிரின்சிபல் மற்றும் நிர்வாகி உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.