shadow

பாதை தவறி பாகிஸ்தான் சென்று மீண்டும் பாரதம் திரும்பிய பெண்ணுக்கு குவியும் வரன்கள்

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இருந்து தவறுதலாக பாகிஸ்தான் சென்ற மாற்றுத்திறனாளி பெண்ணான கீதா என்ற பெண் கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் 26-ம் தேதி அவர் இந்தியா திரும்பினார். அவர் தற்போது மத்தியப்பிரதேசம் மாநில தலைநகரான இந்தூரில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்கியுளார்.

இந்த நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோர் கீதாவை சந்தித்து பேசி அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் கீதாவின் பாதுகாவலர் ஞானேந்திரா புரோகித் கடந்த சில தினங்களுக்கு முன் அவரது பேஸ்புக்கில், கீதாவுக்கு திருமணம் செய்ய உள்ளதாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பிய கீதாவுக்கு திருமண வரன்கள் குவிந்து வருகின்றன என அவரது பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புரோகித் கூறுகையில், கீதாவை திருமணம் செய்வதற்காக சுமார் 20 பேர் வரை தங்களை பற்றிய விவரங்களை அனுப்பியுள்ளனர். இதில் 12 பேர் மாற்று திறனாளிகள், ஒரு பூசாரி, ஒரு எழுத்தாளரும் அடங்குவர். வரன்களை தேர்வு செய்வது குறித்து கீதா முடிவெடுப்பார் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply