சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 10 ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சென்னை சென்ட்ரல் நிலையம் ரயில்வே நிலையம் அருகில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர், வீட்டில் கோபித்துக்கொண்டு இரயில் நிலையம் வந்துள்ளார். அவர் தனியாக அழுது கொண்டிருந்ததை பார்த்த 27 வயது இளைஞர் ஒருவர் அவருடன் அன்புடன் பேசி, தான் அவருக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளார்

இதனை நம்பிய அந்த மாணவி அவருடன் ரயில் பெட்டி ஒன்றில் ஏறி உள்ளார். அப்போதுதான் அது காலியான ரயில் பெட்டி என்று அந்த சிறுமிக்கு தெரிய வந்தது. அந்த ரயில் பெட்டியில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அந்த இளைஞன் அதன்பின் தப்பித்து ஓட முயல அப்போது அங்கு வந்த போலீசார் ஒருவர் அந்த இளைஞரை பிடித்து விசாரணை செய்து உள்ளார்

அப்போதுதான் அந்த சிறுமி நடந்ததை கூற இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். பரபரப்பாக இயங்கிவரும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பத்தாம் வகுப்பு சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply