பலாத்காரம் செய்ய வந்த அண்ணனைக் கொன்ற இளம்பெண்:

பரபரப்பு தகவல்

உத்தரபிரதேச மாநிலத்தில் பலாத்காரம் செய்ய வந்த அண்ணனை இளம்பெண் ஒருவர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 20 வயது பெண் ஒருவர் தனது பெற்றோர் வீட்டில் இல்லாத நிலையில் தனியாக இருந்தார்

அப்போது அவரது உடன் பிறந்த சகோதரரே அவரிடம் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது இதனையடுத்து அந்த இளம்பெண் அருகில் இருந்த அரிவாளை எடுத்து தனது சகோதரரை வெட்டியுள்ளார் இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த சகோதரர் கீழே விழுந்து மரணம் அடைந்தார்

உடனடியாக அந்த இளம் பெண் காவல் நிலையத்தில் சென்று நடந்ததைக் கூறி சரணடைந்தார் இதனையடுத்து அந்த இளம் பெண்ணின் சகோதரர் பிணத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்

பாலியல் பலாத்காரம் செய்ய வந்த அண்ணனை தங்கையே கொலை செய்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply