shadow

shadow

பிரேசில் நாட்டில் நடைபெற்ற உலகக் கோப்பை  இறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று ஜெர்மனி அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இறுதிப்போட்டியில் போராடிய அர்ஜென்டினா ஏமாற்றம் அடைந்தது.   ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கில் இந்த போட்டியை நேரில் பார்த்து வெற்றிக்கு காரணமான ஜெர்மனி வீரர்களை கட்டிப்பிடித்து வாழ்த்தினார்.

கடந்த ஒருமாதமாக உலகம் முழுவதும் பெரும் ஆதரவுடன் நடந்து வந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் க்ளைமாக் இன்று அதிகாலை நடந்தது. உலகம் முழுவதும் ஒரு பில்லியன் மக்கள் இந்த போட்டியை பார்த்து ரசித்ததாக கூறப்படுகிறது.  அரையிறுதியில் பிரேசில் அணியை தோற்கடித்த ஜெர்மனியும், நெதர்லாந்தை தோற்கடித்த அர்ஜெண்டினாவும் இன்றைய இறுதிப்போட்டியின் மோதின.

இன்று அதிகாலை 1.30 மணிக்கு பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் மாரகானா ஸ்டெட்டியத்தில் இறுதிப் போட்டி நடைபெற்றது.

ஜெர்மனி அணிக்கு பிலிப்லாம்  அவர்களும் அர்ஜெண்டினா அணிக்கு லியோனல் மெர்சி அவர்களும் தலைமை தாங்கினர். இரு அணிகளும் சமபலம் வாயந்தவை என்பதால் மிக ஆக்ரோஷமாக மோதின.

இரு அணிகளும் முதல்பாதியில் கோல்கள் எதுவும் போடாததால் இரண்டாவது பாதி ஆட்டம் அனல் பறந்தது. ஆனால் இரண்டாவது பாதியின் முடிவிலும் 0-0 என்ற கோல்கணக்கில் இரு அணிகளும் இருந்ததால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இந்த கூடுதல் நேரத்தில் ஜெர்மனியின் மரியா கோட்சே ஒரு அசத்தலான கோல் ஜெர்மனி அணியின் வெற்றிக்கு உதவினார்.

ஏற்கனவே 3 முறை உலகக் கோப்பையை வென்ற ஜெர்மனி, இந்த வெற்றியின் மூலம் 4–வது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

Leave a Reply