ஜெர்மன் நாட்டின் இளவரசர் குதிரையால் பலி

ஜெர்மன் நாட்டின் இளவரசர் குதிரையால் பலி

ஜெர்மன் நாட்டின் இளவரசர் ஜார்ஜ் என்பவர் குதிரை பந்தயத்தில் கலந்து கொண்டபோது எதிர்பாராத வகையில் குதிரையில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலியானார்.

41 வயதான இளவரசர் ஜார்ஜ், இங்கிலாந்து நாட்டின் ஒலிவியா ரச்செலி பேஜ் என்ற பெண்ணை காதலித்து 2015ஆம்ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இதனையடுத்து ஜெர்மனை விட்டு வெளியேறி லண்டனில் குடியேறிய ஜார், இங்கிலாந்தின் அபெதோர்பே அரண்மனை அருகில் நடந்த குதிரை பந்தயத்தில் அவ்வப்போது கலந்து கொள்வது வழக்கம்.

அதேபோல் சமீபத்தில் நடந்த ஒரு குதிரை பந்தயத்தில் கலந்து கொண்டபோது அவர் சென்ற குதிரை திடீரென வேகமாக சென்றதோடு அந்த குதிரை துள்ளிக் குதித்தது. இதில் இளவரசர் ஜார்ஜ் நிலைதடுமாறி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். இந்த தகவலை ஜெர்மன் அரச குடும்பம் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published.