திமுகவுக்கு காயத்ரி ரகுராம் கேட்ட 9 கேள்விகள்

1. பள்ளி குழந்தைகள் மற்றும் பெண்கள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். காவல்துறை புகார் எடுக்க கூட மறுப்பது ஏன்?

2. பெட்ரோல் டீசல் விலையை முதல்வர் முக ஸ்டாலின் ஏன் குறைக்க மறுக்கின்றார்?

3. காவல்துறையினர் குற்றவாளிகளால் கொலை செய்யப்படுகின்றனர், நடவடிக்கை என்ன?

4. ஒரு மணி நேர கனமழைக்கே இடுப்பு அளவுக்கு வெள்ளம் தேங்கி நிற்கிறது ஏன்?

5. காய்கறி விலை உச்சத்திற்கு சென்று உள்ளது ஏன்?

6. கலைஞர் கருணாநிதியின் புகைப்படம் அம்மா உணவகத்தில் இருப்பது குறித்து மௌனம் ஏன்?

7. ரவுடிகள் கடைகளை அடித்து நொறுக்கி துன்புறுத்தி வருகின்றனர். நடவடிக்கை இல்லை ஏன்?

8. குழந்தைகள் மற்றும் பசு மாடுகள் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. எந்த நடவடிக்கையும் இல்லாதது ஏன்?

9. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட பேப்பர் தற்போது பேப்பர் படகுகள் மிதக்கின்றன என்ன பதில்?