நேருக்கு நேர் விவாதம் செய்ய தயாரா? அண்ணாமலைக்கு சவால் விட்டார் காயத்ரி ரகுராம்

 

நேருக்கு நேர் விவாதம் செய்ய தயாரா? அண்ணாமலைக்கு சவால் விட்டார் காயத்ரி ரகுராம்

கடந்த சில நாட்களாக அண்ணாமலை மீது கடுமையான விமர்சனம் செய்து வரும் காயத்ரி ரகுராம் தன்னுடன் நேரலையில் நேருக்கு நேர் விவாதம் செய்யத் தயாரா என சவால் விட்டுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் பாஜகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகிய நிலையில் வேறு கட்சிகளில் இணைந்து அரசியல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் அண்ணாமலை குறித்து விமர்சனம் செய்து வரும் காயத்ரி ரகுராம் அண்ணாமலை உடன் நேருக்கு நேர் விவாதம் செய்ய தயார் என்றும் அண்ணாமலை அதற்கு தயாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.