shadow

தனுஷூக்கு வில்லன் ஆகும் கவுதம்மேனன்
dhanush
தனுஷ் நடித்து வரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் துருக்கி படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது.

தனுஷூக்கு ஜோடியாக மேகா ஆஷாஷ் இந்த படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தின் மெயின் வில்லனாக ‘பாகுபலி’ புகழ் ராணா நடிக்கவுள்ள நிலையில் இன்னொரு வில்லன் கேரக்டரில் இந்தப் படத்தின் இயக்குனர் கவுதம்மேனனே நடிக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை தனுஷின் ‘வொண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் கவுதம் மேனனின் ‘ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்திற்கு முடிந்துவிடும் என்றும் அதனை அடுத்து தனுஷ், வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வடசென்னை’ படத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply