shadow

ajith and gautham menonஅஜீத்,அனுஷ்கா,த்ரிஷா நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. இந்த திரைப்படத்தை கவுதம் மேனன் இயக்கி வருகிறார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கின்றார்.

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானபோது டுவிட்டரே அதிரும் வகையில் ரசிகர்களிடம் இருந்து பயங்கர வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் அஜீத்தின் கேரக்டர் குறித்து கவுதம் மேனன் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.

இந்த படத்தில் அஜீத்தை 14 முதல் 40 வயது வரை உள்ள வாழ்க்கைப்பயணத்தை வெவ்வேறு வித கெட்டப்புகளில் காட்ட முயற்சித்துள்ளோம். அஜீத்தின் கெட்டப்புகள் நான் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை என்றாலும், புதுவிதமான லுக்கில் அஜீத் தனது அசத்தலான நடிப்பின் மூலம் தனது கெட்டப்பை மெருகேற்றியுள்ளார். இன்னும் சொல்லப்போனால் அஜீத் இந்த படத்திற்காக அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கின்றார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அஜீத் நடிப்பு குறித்து கவுதம்மேனன் பெருமையாக கூறியிருந்தாலும், அஜீத்தின் கெட்டப் தனக்கு திருப்தியில்லை என கூறியதற்காக அஜீத் ரசிகர்கள் கவுதம் மேனனை சமூக வலைத்தளங்களில் கண்டித்து வருகின்றனர். இதனால் சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply