shadow

14அஜீத் நடிப்பில் கவுதம் மேனன் இயக்குவதாக இருந்த திரைப்படம் திடீரென டிராப் ஆகிவிட்டதாகவும், இதற்கு அஜீத் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கவுதம் மேனன் டுவிட்டரில் கூறியதாக இன்று மாலை முதல் சமூக இணையதளங்களில் பரபரப்பாக செய்தி வெளியானது.

ஏற்கனவே சூர்யாவை வைத்து படம் எடுக்க திட்டமிட்டுருந்த கவுதம் மேனன், திடீரென அந்த படத்தை டிராப் செய்தார். மேலும் வங்கிக்கடனுக்காக சென்னை அடையாறில் உள்ள வீடு ஏலத்திற்கு வந்த நிலையில், அவருக்கு ஆறுதலாக இருக்கும் ஒரே விஷயம் அஜீத்தின் படம் மட்டும்தான்.

இந்த படத்தையும் டிராப் செய்துவிட்டாரே என அஜீத் ரசிகர்களும், கோலிவுட் ரசிகர்களும் எண்ணிக்கொண்டிருந்த வேளையில் இந்த செய்தி ஏப்ரல் 1, முட்டாள்கள் தினத்திற்காக யாரோ ஒரு நபர், கவுதம் மேனன் பெயரில் போலி டுவிட்டர் அக்கவுண்ட் ஒன்றை ஆரம்பித்து இந்த செய்தியை பரவவிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.  இந்த தகவலால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

thala

 

Leave a Reply