கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ஒப்பந்தத்தை மீறி மேற்கு மண்டலத்தை சேர்ந்த லாரிகளுக்கு லோடு அளிப்பதற்கு தென்மண்டல எல்.பி.ஜி. காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதை கண்டித்து, மங்களூரில் உள்ள ஐ.ஓ.சி., பி.பி.சி,ச்.பி.சி ஆகிய 3 ஆயில் நிறுவனங்களின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து இன்று முதல் எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரியில் லோடு ஏற்றுவதில்லை என அறிவித்திருந்தனர். இந்நிலையில்,  நாமக்கல்லில் தென்மண்டல எல்.பி.ஜி. காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், தென் மண்டல லாரிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுமென அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து ஸ்டிரைக்கை வாபஸ் பெறுவது என முடிவு செய்யப்பட்டது.

Leave a Reply