shadow

சிலிண்டர் மானியம் விவகாரம்: கடும் எதிர்ப்பால் திடீர் பல்டி அடித்த மத்திய அரசு

சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் ரத்து செய்யப்படும் என்றும் ஒவ்வொரு மாதமும் சிலிண்டரின் விலையை ரூ.4 உயர்த்தி கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகவும் நேற்று செய்திகள் வெளியாகின.

இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநிலங்களவையில் இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டதால் கடும் அமளி நிலவியது. இதனையடுத்து எதிர்க்கட்சிகளுக்கு பதிலளித்த தர்மேந்திர பிரதான் ‘சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் ரத்து செய்யப்படாது. யாருக்குத் தேவை, தேவையில்லை என்பதை மத்திய அரசு தீர்மானிக்கும்’ என்று குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாகவே மத்திய அரசு இந்த விஷயத்தில் திடீர் பல்டி அடித்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply