பெரும் பரபரப்பு

ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் வாயுக்கசிவு ஏற்பட்டிருப்பதால் அந்த பகுதி பொதுமக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். இதுவரை வெளிவந்துள்ள தகவலின்படி சுமார் 1000 பேர் பாதிப்பு அடைந்துள்ளதாகவும், அந்த பகுதியில் சாலையில் கொத்து கொத்தாக பொதுமக்கள் மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது

விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் வாயுக்கசிவு ஏற்பட்டிருப்பதை அடுத்து அந்த ஆலையின் அருகில் உள்ள 5 கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் ரசாயன கசிவால் பொதுமக்கள் மூச்சுத் திணறல், வாந்தி, தலைவலியுடன் நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *