shadow

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி

சமையல் சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென உயர்த்தப்பட்ட தாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கடந்த மே ஒன்றாம் தேதி 50 ரூபாய் சமையல் எரிவாயு சிலிண்டர் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் உயர்த்தப்பட்டுள்ளது

இன்று சமையல் எரிவாயு சிலிண்டர் ரூபாய் மூன்று உயர்த்தப்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து சென்னையில் சிலிண்டர் விலை 1018 ரூபாய் 50 காசு என விற்பனையாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

சமையல் எரிவாயு சிலிண்டர் மட்டுமன்றி வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையும் 8 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 2507 ரூபாய் என விற்பனை செய்து வருகிறது