shadow

8f2c869e-d474-4e7b-811d-8445990d5869_S_secvpf

உணவிற்கு நல்ல மணத்தையும், சுவையையும் தரும் பூண்டு இதயத்தை பாதுகாக்கும் திறன் கொண்டது. ஒரு 100 கிராம் பூண்டில் நீர்ச்சத்து 62.0 விழுக்காடும், புரோட்டின் 6.3 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 1.0 விழுக்காடு, நார்ச்சத்து 0.8 விழுக்காடும், கார்போஹைட்ரேட்ஸ் 29.8 விழுக்காடும் உள்ளது.

மேலும் கால்சியம் 30 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 310 மில்லி கிராமும் இரும்பு 1.3 மில்லி கிராமும், வைட்டமின் சி 13 மில்லி கிராமும் சிறிதளவு வைட்டமின் பி சத்துக்களும் உள்ளன. இத்தகைய மருத்துவக் குணங்கள் நிறைந்த பூண்டை தினமும் எல்லா வகை உணவுகளிலும் சேர்த்து சாப்பிட்டால் இதய நோயைக் கட்டுபடுத்தலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

பூண்டு வாயுப் பிடிப்பை நீக்கி இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொழுப்புக்களைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும். இதனால் நம் உடல் முழுவதும் இரத்தம் தடையின்றி சுற்றுவதால் செல்களுக்குத் தேவையான உணவும், ஆக்ஸிஜனும் கிடைத்து, இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சு வாங்குதல் ஆகியவற்றை சீராக்குகிறது.

காசநோயால் துன்பப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும். இந்தப் பூண்டுப் பாலை காலையும் இரவு தூங்குவதற்கு முன்பும் சாப்பிட்டால் சளி, இருமல், வாயு போன்ற அனைத்து நோயும் சரியாகும். ஆகவே தினமும் பூண்டை சாப்பிடுங்கள்! இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாத்திடுங்கள்!

Leave a Reply