1913ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் இங்கிலாந்து அரசின் இனப் பாகுபாடான சட்டத்துக்கு எதிராக மகாத்மா காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு 100 ஆண்டுகள் நிறைவுபெறும் நிலையில், அச்சம்பவத்தை நினைவு கூரும் வகையில் மீண்டும் அதேபோன்ற நடைப்பயணம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இந்திய ஒப்பந்தத் தொழிலாளர்கள் மீதான 3 பவுண்ட் வரி, இந்து மற்றும் முஸ்லிம் திருணங்களை செல்லாததாக்கும் அரசு உத்தரவு ஆகியவற்றுக்கு எதிராக, 1913ல் காந்தி தனது ஆதரவாளர்களுடன் நடைப்பயணம் தொடங்கினார். இவர்கள் நடால் மாகாண எல்லையை கடந்து டிரான்ஸ்வால் மாகாண எல்லைக்குள் நுழைந்த போது, அனைவரையும் அரசு கைது செய்தது. மற்றொரு மாகாணத்துக்குள் இந்தியர்கள் நுழையும்போது, அரசிடம் முன் அனுமதி பெறவேண்டும். அவ்வாறு அனுமதி ஒப்புகை சீட்டு இல்லாததால் அனைவரும் கைது செய்யப்பட்டனர். வழக்கத்துக்கு மாறான காந்தியின் இந்தப் போராட்டம், அவர் 1914ல் தாயகம் திரும்பிய பிறகு இங்கிலாந்து அரசுக்கு எதிரான சத்தியாகிரக போராட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியானது. இதுவே தண்டி யாத்திரைக்கு இட்டுச் சென்றது.
Leave a Reply
You must be logged in to post a comment.