shadow

11 வயது சிறுமியுடன் டூயட் பாடிய ஜி.வி.பிரகாஷ்
gvp1
விஜய்,சமந்தா, எமிஜாக்சன் உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தெறி’ படத்தின் பாடல் வெளியீடு வரும் 20ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பாடல்கள் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் ஜி.வி.,பிரகாஷ் 11வயது சிறுமியும் பிரபல பாடகியுமான உத்ரா உன்னிகிருஷ்ணனுடன் ஒரு பாடலை பாடியுள்ளதாகவும் இந்த பாடல் ஒரு டூயட் பாடல் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பாடல் இந்தியில் சூப்பர் ஹிட் ஆன ஈனாமீனாடீகா’ என்று தொடங்கும் பாடலின் ரீமேக் என்றும் கூறப்படுகிறது.

‘தெறி’ திரைப்படம் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 50வது படம் என்பதால் அதிக சிரத்தையுடன் இந்த படத்தின் பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ‘கில்லி’ படத்திற்கு பின்னர் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகும் விஜய் படமாக ‘தெறி’ இருக்கும் என்றும் ஜி.வி.பிரகாஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a Reply