ரஜினியைவிட நான்கு மடங்கு ஸ்பீடில் செல்லும் ஜி.வி.பிரகாஷ்

ரஜினியைவிட நான்கு மடங்கு ஸ்பீடில் செல்லும் ஜி.வி.பிரகாஷ்
gv prakash
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பாட்ஷா’ திரைப்படம் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவால் கிட்டத்தட்ட ஒரு வருட காலத்தில் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தின் வெற்றியை இன்னும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் புகழ்பெற்ற வசனமான ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்ற டைட்டிலில் உருவாகி வரும் படம் ஒன்றில் நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ் இந்த படத்தை மூன்றே மாதங்களில் முடித்துவிட்டார். பாட்ஷா படம் எடுக்கப்பட்ட காலத்தில் நான்கில் ஒரு பங்கு காலத்திற்குள் ஜி.வி.பிரகாஷ் படம் முடிந்துவிட்டது.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, நிரோஷா, சரவணன், கருணாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். ‘டார்லிங்’ படத்தை இயக்கிய இயக்குனர் சாம் ஆண்டன் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் வரும் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாட்ஷா போலவே இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஆட்டோ டிரைவராக நடித்துள்ளார். இருப்பினும் இந்த படம் ‘பாட்ஷா’ படத்தின் ரீமேக் இல்லை என்றும் இந்த படத்தின் கதை முற்றிலும் புதியது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply