மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்த அம்மாநில அமைச்சரவை முடிவு செய்திருப்பதாக தெரிகிறது

இந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 முதல் அமலுக்கு வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. நேற்று ஒரே நாளில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 63 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் 349 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

முழு நேர ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை நடத்தியதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply