இயல்புநிலை திரும்புவது எப்போது?

சென்னை, மதுரை, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் இன்று 3ஆவது நாள் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா அதிகம் பாதித்த சென்னை, மதுரை, கோவை, ஆகிய 3 மாநகராட்சிகளில் நேற்று முன் தினம் முதல் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி சென்னை, கோவை, மதுரையில் இன்று 3ஆவது நாள் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பாதித்த திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய 2 மாநகராட்சிகளில் 3 நாட்களுக்கு மட்டுமே முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சேலம், திருப்பூரில் இன்றுடன் 3 நாட்கள் முழு ஊரடங்கு முடிகிறது என்பதால் நாளை முதல் அத்தியாவசிய பொருட்கள் விற்பனையாகும் கடைகள் திறக்கப்படும் என்பதும், சென்னை, மதுரை, கோவை ஆகிய 3 நகராட்சிகளில் நாளை மறுநாள் முதல் அத்தியாவசிய பொருட்கள் விற்பனையாகும் கடைகள் திறக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply