தேவையானவை:

பப்பாளி, வாழை, ஆப்பிள், சப்போட்டா, மாம்பழம் ஆகியவற்றை துண்டுகளாக்கி மிக்ஸியில் அரைத்த பழக்கூழ் – 2 கப், வெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன், சர்க்கரை – 2 கப், பல் பவுடர் கால் கப், குளூக்கோஸ் பவுடர் – 3 டீஸ்பூன், ஃப்ரூட் எசன்ஸ் – அரை டீஸ்பூன், பாதம், முந்திரித் துண்டுகள் – 2 டீஸ்பூன், ஆரஞ்சு கலர் – அரை டீஸ்பூன்.

செய்முறை :

அடி கனமான பத்திரத்தில் பழக்கூழ், சர்க்கரையை சேர்த்து கொதிக்கவிடவும். கலவை சிறிது கெட்டியாக வந்ததும் குளூக்கோஸ் பவுடர், பால் பவுடர், பாதம், முந்திரி துண்டுகள், வெண்ணெய் சேர்த்து மேலும் சிறிது நேரம் கிளறவும். நன்றாக கெட்டியானதும் எசன்ஸ், கலர் சேர்த்துக் கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டவும். ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து ‘ஜில்’ என்று பரிமாறவும்.

Leave a Reply