சென்னை திரும்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது எப்போது? போக்குவரத்து துறை அறிவிப்பு

Tamil-Nadu_bus

பொங்கல் விடுமுறாஇ முடிந்து பணிக்குத் திரும்புபவர்களின் வசதிக்காக நாளை முதல் 16709 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும், இந்த சிறப்பு பேருந்துகள் ஜனவரி 19ஆம் தேதி வரை இயக்கப்படும் என்றும் தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

பொங்கல் விடுமுறை ஜனவரி 14ஆம் தேதி முதல் வரும் 18ஆம் தேதி வரை இருந்தாலும், நாளை முதல் பணியை தொடங்க ஒருசிலர் சொந்த ஊரில் இருந்து கிளம்பவுள்ளனர்.

இந்த நிலையில் நாளை முதல் பொங்கல் விடுமுறைக்காக சென்றவர்கள் திரும்புவதற்கு வசதிக்காக நாளை முதல் 16709 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது