shadow

நாளை முதல் ஒருநாள் கிரிக்கெட் தொடர்: இந்தியாவின் வெற்றி தொடருமா?

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து வரும் நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான டி20 கிரிக்கெட் போட்டியில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றது.

இந்த நிலையில் இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை முதல் தொடங்க உள்ளது.

நாளை ஆக்லாந்து மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன

டி 20 கிரிக்கெட் தொடரை போலவே ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணி வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவம்பர் 25ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டி

நவம்பர் 27ஆம் தேதி இரண்டாவது ஒருநாள் போட்டி

நவம்பர் 30 ஆம் தேதி மூன்றாவது ஒருநாள் போட்டி