நாளை முதல் மீண்டும் இலவச தரிசன டோக்கன்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

டிசம்பர் மாதத்திற்கான இலவச டோக்கன் வழங்கப்படுவது எப்போது? என திருமலை திருப்பதி தேவஸ்தானம் சற்றுமுன் அறிவித்துள்ளது.

நவம்பர் மாதம் முடிவடையவுள்ள நிலையில் டிசம்பர் மாதத்திற்கான இலவச டோக்கன் நாளை முதல் ஆன்லைனில் வழங்க இருப்பதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

தினந்தோறும் 2000 டோக்கன்கள் வீதம் நாளை காலை 9 மணி முதல் தேவஸ்தான இணையதளம் மூலம் வழங்கப்பட உள்ளது.

மேலும் நாளை மறுநாள் முதல் தங்கும் அறைகளையும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கண்டிப்பாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.