சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு அறிவிப்பா? அதிர்ச்சியில் பொதுமக்கள்

கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டு வரும் நிலையில் நாளையும் சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த சில நாட்களாக விலை உயர்ந்து கொண்டே வருவதை அடுத்து சிலிண்டர் விலையும் உயர வாய்ப்பு இருப்பதாகவும் மத்திய அரசு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன

மேலும் நாளை முதல் சிலிண்டர் டெலிவரி செய்யும் நபரிடம் ஓடிபி எண்ணை தெரிவித்தால் மட்டுமே சிலிண்டர் வழங்கப்படும். இந்த நடைமுறை சென்னை உள்பட ஒரு சில இடங்களில் சோதனை முயற்சியாக இருந்து வரும் நிலையில் நாளை முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது